நெய்குப்பை-மருங்கூர் சாலை சீரமைக்கப்படுமா?


நெய்குப்பை-மருங்கூர் சாலை சீரமைக்கப்படுமா?
x

நெய்குப்பை-மருங்கூர் சாலை சீரமைக்கப்படுமா?

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

குண்டும், குழியுமான நெய்குப்பை-மருங்கூர் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

திருமருகல் ஒன்றியம் மருங்கூர், நெய்க்குப்பை ஊராட்சிகளில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை பாரத பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக மருங்கூர், எரவாஞ்சேரி, துறையூர், கண்ணமங்கலம், கொட்டாரக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் நாகை, காரைக்கால், நன்னிலம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த சாலை வழியாக சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று வருகின்றனர்.

தற்போது மருங்கூர்-நெய்க்குப்பை சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

சீரமைக்கப்படுமா?

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விபத்து ஏற்படும் முன்பு குண்டும், குழியுமான நெய்க்குப்பை-மருங்கூர் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story