நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே, அதங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே, அதங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா்.
நெல் சாகுபடி
கூத்தாநல்லூர் அருகே அதங்குடி கிராமம் உள்ளது. அதங்குடி, ஆய்குடி, பொதக்குடி கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும்
குறுவை மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டிலும், சாகுபடி செய்யப்பட்ட நெல்லை அறுவடை செய்த பிறகு, கொள்முதல் செய்வதற்கு நீண்ட தூரங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
சிரமங்கள்
இதனால், வாகனங்களுக்கு வாடகை கட்டணம் கொடுக்க முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும், மழை மற்றும் இயற்கை இடர்பாடு் காலங்களில் ஈரப்பதம் உள்ள நெல்லை வெயிலில் உலர்த்தி தூரத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே அதங்குடியில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.