பொதக்குடி-ஆய்குடி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?


பொதக்குடி-ஆய்குடி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?
x

குண்டும், குழியுமாக காணப்படும் பொதக்குடி-ஆய்குடி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

குண்டும், குழியுமாக காணப்படும் பொதக்குடி-ஆய்குடி இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

பொதக்குடி-ஆய்குடி இணைப்புசாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் இருந்து ஆய்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையையொட்டி நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த சாலையில் பள்ளி வாகனங்கள் மற்றும் கார், வேன், ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

மேலும், இந்த சாலையை பொதக்குடி, ஆய்குடி, அகரபொதக்குடி, கண்கொடுத்தவனிதம், காவாலக்குடி, பூதமங்கலம், மேலகாரிச்சாங்குடி, புதுக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குண்டும், குழியுமாக காணப்படுகிறது

இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மோட்டார் சைக்கிள்களில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனா. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதக்குடியைச் சேர்ந்த இக்பால்தீன் கூறுகையில், பொதக்குடி, ஆய்குடி இணைப்பு சாலை ஒரு கால கட்டத்தில் பள்ளமே இல்லாத சாலையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது பள்ளமே சாலையாக உள்ளது.மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைக்கின்றனர். குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சீரமைக்க வேண்டும்

பொதக்குடி கொத்துபுதீன் கூறுகையில், பொதக்குடி, ஆய்குடி இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளதால், கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.


Next Story