கிணத்துக்கடவில்சாலையோர புதர்கள் அகற்றப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கிணத்துக்கடவில்சாலையோர புதர்கள் அகற்றப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கிணத்துக்கடவு
கோவை -பொள்ளாச்சி வழியே நான்கு வழி சாலை அமைக்கும் போது பல இடங்களில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. அதில் கிணத்துக்கடவு ஊருக்குள் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சாலையோரம் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையில் போக்குவரத்து இருப்பதால் பொதுமக்கள் அச்சமின்றி நடந்து செல்ல சர்வீஸ் சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால் மீது நடந்து சென்று வருகின்றனர். இதில் தற்போது கிணத்துக்கடவு பஸ் நிலையத்திலிருந்து கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் வழியில் உள்ள மழைநீர் வடிகால் பகுதியில் செடி, கொடிகள், புதர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து உள்ளதால் பஸ் நிலையத்தில் இருந்து இறங்கி கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள சர்வீஸ் சாலைகளை கண்டறிந்து பொதுமக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்டு இருந்த பாதையை பார்வையிட்டு பாதையை ஆக்கிரமித்திருக்கும் காட்டுச் செடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.