தாமிரபரணி கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் விரைவுபடுத்தப்படுமா?


தாமிரபரணி கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் விரைவுபடுத்தப்படுமா?
x

விருதுநகரில் தாமிரபரணி கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விைரவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்


விருதுநகரில் தாமிரபரணி கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விைரவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் வினியோகம்

விருதுநகர் நகராட்சி பகுதியில் 15 நாட்களுக்கு மேலான இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகர் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் தற்போதைய குடிநீர் ஆதாரங்களில் இருந்து குறைவான அளவில் குடிநீர் கிடைப்பதால் பிரச்சினை நிலவுவதாகவும், கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் இதற்கு தீர்வு ஏற்படும் என்றும் தொடர்ந்து விளக்கமளித்து வருகிறது.

ஆனால் நகரின் பல்வேறு பகுதிகளில் தாமிரபரணி கூடுதல் கூட்டு குடிநீர் திட்ட பகிர்மான குழாய் பதிக்கும்போது விதிமுறைப்படி பதிக்கவில்லை எனக்கூறி நகராட்சி கவுன்சிலர்களால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

வலியுறுத்தல்

ஆனால் பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில் கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது என்று உறுதியாக தெரியாத நிலை நீடிக்கிறது.

நகராட்சி நிர்வாகமும் இதுபற்றி கலந்தாய்வு செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே நகரில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண தாமிரபரணி கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாவட்ட நிர்வாகம் குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு களப்பணி செய்யும் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story