வெற்றிலையூரணி குளம் தூர்வாரப்படுமா?


வெற்றிலையூரணி குளம் தூர்வாரப்படுமா?
x

வெற்றிலையூரணி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெற்றிலையூரணி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தண்ணீர் வற்றியது

வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி அருகே வெற்றிலையூரணி குளம் உள்ளது.

குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளம் கடந்த 4 மாதத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக நிரம்பியது. ஆனால் குளத்தில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படாமல் இருந்ததால் ஒரு மாதத்தில் தண்ணீர் முழுவதும் வற்றி விட்டது.

குளத்தில் நீர் வற்றிவிட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆகாயத்தாமரை

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி குளம் அப்பகுதி மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளத்தை ஆகாயதாமரை ஆக்கிரமித்து இருந்ததால் தண்ணீா் மிக விரைவில் வற்றி விட்டது. மேலும் இந்த குளத்தில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

தற்போது இந்த பகுதியில் மழை பெய்து வருகிறது. எனவே குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றினால் தான் தண்ணீரை சேகரித்து வைக்க முடியும்.

மேலும் ஊராட்சிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் குளத்திற்குள் விடப்பட்டுள்ளதால் தண்ணீர் மாசடைகிறது.

ஆகையால் குளத்திற்குள் சாக்கடை கழிவுநீர் கலப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story