உடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா?


உடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா?
x

கீழ்வேளூர் அருகே உடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே உடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பாலம் கட்டுமானப்பணி

நாகை மாவட்டம், ஆழியூர் ஊராட்சி, ஆழியூர்-திருக்கண்ணங்குடி செல்லும் சாலையில் ஆற்றங்கரை தெரு பகுதியில் அமைந்துள்ள பாலையூர் வாய்க்கால் பாலம் கட்டுமான பணி கடந்த மே மாதம் 30-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதன்காரணமாக இந்த வழியாக செல்பவர்கள் அருகில் உள்ள கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி, கோவில்கடம்பனூர் பஸ் நிறுத்தம் வழியாக தீம்பாம்பாள்புரம் ஆற்றங்கரை பகுதியை கடந்து திருக்கண்ணங்குடிக்கு மாற்று பாதை வழியாக கடந்த 15 நாட்களாக சென்று வருகின்றனர்.

உடைந்தது

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை செங்கல் ஏற்றி வந்த ஒரு டிராக்டர்‌ பாலையூர் வாய்க்கால் பாலத்தின் மீது ஏறியபோது பாலம் உடைந்து, வாய்க்கால் நடுவில் டிராக்டர் சிக்கிக் கொண்டது. பின்னர் அந்த டிராக்டர், பொக்லின் எந்திரம் மூலம் வெளியே இழுத்து வரப்பட்டது.மேலும், இந்த பாலப்பணியின் காரணமாக திருக்கண்ணங்குடி, நெம்மேலி பகுதிக்கு செல்பவர்கள் மற்றும் புகழ் பெற்ற திருக்கண்ணங்குடி தாமோதர நாராயண பெருமாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கீழ்வேளூர் ெரயில்வே கேட் வழியாக 6 கி.மீ. தூரம் சுற்றிச் செல்கின்றனர்.

சீரமைக்கப்படுமா?

எனவே, உடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருக்கண்ணங்குடி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story