பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா?


பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா?
x

கொண்டைக்கடலை விலை குறைவாக உள்ள நிலையில் பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி மறுக்கும் நிலை உள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

விருதுநகர்

கொண்டைக்கடலை விலை குறைவாக உள்ள நிலையில் பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி மறுக்கும் நிலை உள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

கொண்டைக்கடலை

இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

கொண்டைக்கடலை சாகுபடி தற்போது 13.68 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 13.54 மில்லியன் டன்னாக இருந்தது. இந்தநிலையில் மத்திய அரசு கொண்டைக்கடலையின் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.5,335 என்று நிர்ணயித்துள்ளது.

ஆனால் வெளிச்சந்தையில் கொண்டைக்கடலை குவிண்டால் ரூ. 4,500-ல் இருந்து ரூ.4,800 வரை விற்பனை ஆகும் நிலை உள்ளது. இந்தநிலையில் பட்டாணி இறக்குமதிக்கு அனுமதி அளித்தால் கொண்டைக்கடலை விலை வெளிச்சந்தையில் மேலும் குறைய வாய்ப்பு ஏற்படும் நிலையில் உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கருதும் மத்திய அரசு பட்டாணி இறக்குமதிக்கு அனுமதி மறுக்கும் நிலை தொடர்கிறது.

பட்டாணி இறக்குமதி

இந்தநிலையில் மத்திய அரசு நடப்பு மாதத்தில் மட்டும் 11.68 லட்சம் டன் கொண்டைக்கடலை கொள்முதல் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் 4.9 லட்சம் டன்னும், குஜராத்தில் 3.23 லட்சம் டன்னும், கர்நாடகாவில் 68,260 டன்னும், ஆந்திராவில் 53,655 டன்னும், தெலுங்கானாவில் 50,280 டன்னும் கொண்டைக்கடலை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தானிய வர்த்தகர்கள் பட்டாணி இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உறுதியாக கொண்டைக்கடலை குறைந்தபட்ச ஆதாரவிலையைவிட பட்டாணி விலை குறைவாக விற்பனை செய்ய வாய்ப்பு இருக்காது என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கொண்டைக்கடலையின் குறைந்தபட்ச ஆதாரவிலையை வெளிச்சந்தையில் எட்டுவதற்காக பட்டாணி இறக்குமதிக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையது அல்ல என்று மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.


Next Story