வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?


வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?
x

மாரநேரி அருகே வாயக்கால் மதகு சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

மாரநேரி அருகே வாயக்கால் மதகு சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

10 ஆயிரம் ஏக்கர்

பூதலூர் தாலுகா கச்சமங்கலம் தடுப்பணையில் வெண்ணாற்றிலிருந்து பிரிந்து கள்ளப்பெரம்பூர் ஏரியில் முடிவடையும் வாய்க்கால் ஆனந்த காவிரி வாய்க்கால். இந்த வாய்க்கால் மூலம் கச்சமங்கலம் தொடங்கி குணமங்கலம் சித்தாயல் வரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

சேதமடைந்த வாய்க்காலின் மதகு

இந்த வாய்க்காலில் தலைப்பில் இருந்து கடைமடை வரை ஏகப்பட்ட கிளை வாய்க்கால் உள்ளன. அதற்கான மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. பூதலூர் தாலுகா மாரனேரி கிராமத்தின் அருகில் ஆனந்த காவிரி வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் நாலுமாத்திரைகுமிழி வாய்க்கால் மதகு சேதமடைந்து காணப்படுகிறது.

மாரநேரியில் இருந்து இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. நாலுமாத்திரைகுமிழி வாய்க்கால் கரை மற்றும் பாலம் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சீரமைக்க வேண்டும்

வாய்க்காலின் மதகு சேதம் அடைந்துள்ளதால் தண்ணீர் வரும் போதும், மழை காலங்களில் தண்ணீர் வெளியேறி கிராமங்களில் புகும் அபாயம் உள்ளது. மேலும் வயல்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்படும்.கடந்த ஆண்டு இந்த குமிழி பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டு சாலை சரிந்தது.ஆனந்தகாவேரி வாய்க்காலில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைத்தனர்.தற்போது பாலத்தின் மேல் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்கால் பாலம் மற்றும் கரையையும், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story