சேதமடைந்த மயானம் சீரமைக்கப்படுமா?
குன்னலூர் ஊராட்சியில் சேதமடைந்த மயானம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலத்தம்பாடி:
குன்னலூர் ஊராட்சியில் சேதமடைந்த மயானம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த மயான கட்டிடம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பண்ணை கிராமத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை அந்த கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு இந்த மயானம் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் அந்த மயானத்தின் மேற்கூரை சேதமடைந்து உள்ளது.
அந்த மயானத்தை தாங்கி நிற்கக்கூடிய தூண்களில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த மயான கட்டிடம் வழுவிழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
கோரிக்கை
இதன் காரணமாக அந்த மயானத்திற்கு செல்லவே அந்த பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மயானத்திற்கு செல்லும் சாலையும் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மயான கட்டிடத்தை சீரமைப்பதுடன்,அந்த மயானத்திற்கு செல்லும் சாலையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.