சேதமடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 26 Oct 2023 12:15 AM IST (Updated: 26 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே சேதமடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா? என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே சேதமடைந்த வாய்க்கால் பாலம் சீரமைக்கப்படுமா? என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பாசன வாய்க்கால்

திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி சோமநாதர் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பண்டாரவடை பாசன வாய்க்காலின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது.

அப்பகுதி பொதுமக்கள் திருமருகல் கடைத்தெரு, வங்கி, மார்க்கெட், பஸ் நிறுத்தம், ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

சேதமடைந்த பாலம்

இந்த நிலையில் இந்த தரைப்பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மழை வெள்ளகாலங்களில் தரைப்பாலத்திற்கு மேல் மழைநீர் செல்கிறது. தடுப்புச்சுவர் இல்லாததால் பள்ளி மாணவ-மாணவிகள் வாய்க்காலில் தவறி விழுந்து விடுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான வாய்க்கால் தரைப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story