பழுதடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?


பழுதடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?
x

கூத்தாநல்லூர் அருகே பழுதடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? ெபாதுமக்கள் எதிபார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே பழுதடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? ெபாதுமக்கள் எதிபார்த்துள்ளனர்.

பயணிகள் நிழலகம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடியில் இருந்து பொதக்குடி செல்லும் சாலையில் இடையில் உள்ளது சேகரை கிராமம். இந்த சேகரை கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.

இந்த பயணிகள் நிழலகத்தை சேகரை, தோட்டச்சேரி, லெட்சுமாங்குடி, பொதக்குடி, கூத்தாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க் கும் மேற்பட்ட கிராமமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் கும்பகோணம், கொரடாச்சேரி, குடவாசல், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருவாரூர், வடபாதிமங்கலம் மற்றும் பல்வேறு ஊர்களுக்குச் சென்று வருவதற்கு இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

பழுதடைந்துள்ளது

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பயணிகள் நிழலகம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக, இருக்கைகள் உடைந்தும், தரைத்தளம் சேதமடைந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் சாலையிலேயே பல மணி நேரம் காத்து நிற்கவேண்டிய நிலை உள்ளது.

சீரமைக்க வேண்டும்

பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழலகத்தை இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் அல்லது பழுதடைந்த பயணிகள் நிழலகத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story