சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
x

நாகூர் புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த சாலை

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

நாகூரில் புதிய பஸ் நிலையத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்குள் உள்ள பழமை வாய்ந்த கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

சேதமடைந்த சாலையில் வெளியூரில் இருந்து நாகூருக்கு வாகனங்களில் வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூர் புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story