சேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா?
x

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த படித்துறை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த படித்துறை

கூத்தாநல்லூர் அருகே உள்ள பண்டுதக்குடி புதுப்பாலம், காளிகாபரமேஸ்வரி கோவில் பின்புறம் வெண்ணாற்றின் கரையோரத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறை கட்டப்பட்டது.

அந்த படித்துறையில் கிராம மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும், காளிகாபரமேஸ்வரி கோவிலுக்கு, இந்த படித்துறையில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அந்த படித்துறை சேதமடைந்து காணப்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

படித்துறையின் ஒரு பக்கம் உள்ள தடுப்பு சுவர் முற்றிலும் இடிந்து விழுந்து விட்டது. படிக்கட்டுகள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.இரவு நேரங்களில் பலர் படிக்கட்டுகளில் விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த படித்துறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story