சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலகம் அப்புறப்படுத்தப்படுமா?
தலைஞாயிறில் சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலகம் இடித்து அப்புறப்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தலைஞாயிறில் சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலகம் இடித்து அப்புறப்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கிராம நிர்வாக அலுவலகம்
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட வேளாணிமுந்தல் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலக கட்டிடம் காலப்போக்கில் சேதம் அடைந்து வந்தது. பல ஆண்டுகளாக ே்சதம் அடைந்து காணப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் வேெறாரு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடம் இடிக்கப்படாமல் அப்படியே உள்ளது.
குடியிருப்புகள்
சேதம் அடைந்த அலுவலக கட்டிடத்துக்கு அருகில் குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சேதம் அடைந்த கட்டிடத்தின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடுவது வழக்கம்.
இந்த நிலையில் அங்கு கட்டிடம் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கட்டிடம் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருவதும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. இது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றிலும் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.