பழுதடைந்த நிலையில் உள்ள பூங்கா சீரமைக்கப்படுமா?


பழுதடைந்த நிலையில் உள்ள பூங்கா சீரமைக்கப்படுமா?
x

வாலாஜாவில் பழுதடைந்த நிலையில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராணிப்பேட்டை

வாலாஜா

வாலாஜாவில் பழுதடைந்த நிலையில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மகாத்மா காந்தி பூங்கா

வாலாஜாபேட்டை நகராட்சியால் வாலாஜாவில் மகாத்மா காந்தி பூங்கா கடந்த 2011-ம் ஆண்டு புதுப்பித்து திறப்பு விழா நடந்தது. அப்போதைய மத்திய இணை மந்திரி ஜெகத்ரட்சகன் மற்றும் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.

வாலாஜாபேட்டை மக்களுக்கு பொழுதுபோக்கும் இடம் என எதுவும் கிடையாது. இந்த பூங்காவால் பொழுது போக்கவும், நடை பயிற்சி மேற்கொள்ளவும், உடற்பயிற்சி செய்யவும் வசதியாக இருக்கும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால் பூங்காவின் திறப்பு நேரம் காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் என்று எழுதிவிட்டு பூங்கா மூடும் நேரத்தினை அதிகாரப்பூர்வமாக எழுதவில்லை.

மாலை 7 மணி வரை பூங்கா பொதுமக்களின் வசதியினை கருதி திறந்து வைக்க வேண்டும். அதனை அறிவிப்பு பலகையில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும்.

கழிவறை

மக்கள் ஆர்வமுடன் வருகின்ற நேரம் மாலை 6 மணி முதல் 7 மணி வரை தான். பூங்காவிற்கு வரும் கணவன், மனைவி, குழந்தைகள், சிறுவர் சிறுமிகள் என அனைவரும் அவசரத்திற்கு பயன்படுத்தும் வகையில் கழிவறைகள், சிறுநீர் கழிப்பறைகள் உபயோகத்தில் இல்லாத நிலையில் மூடப்பட்டே உள்ளது. காரணம் சரிவர பராமரிப்பு இல்லாததால் தான். எனவே, உடனடியாக புதிய கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும்.

பழைய கழிவறை கட்டிடத்தை பழுது பார்த்து சீர் செய்ய வேண்டும்.

பூங்காவில் ஒரே சீரான அளவில் புல்வெளி பரப்பு இல்லை. ஏடாகூடமாக உள்ளன. பூங்காவினை பராமரிக்க அதிக அளவு ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாகம் எடுத்தால் குடிக்க குடிநீர் வசதியே இல்லை. குடிநீர் தொட்டி அமைத்து போதுமான அளவு குடிநீர் கிடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

புதர் போல் வைத்திருக்க கூடாது. பூங்காவின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே நுழைந்து சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். பூங்காவில் நடக்கும் அனைத்து செயல்களையும் பதிவு செய்ய அங்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.

எனவே, உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். பூங்காவில் மக்கள் பயன்பாட்டிற்காக பொருட்கள் வாங்க சிற்றுண்டி அறை வைக்கப்பட்டு இருந்தது. அதனை பல ஆண்டுகளுக்கு முன்பு ‌மூடிவிட்டார்கள். மீண்டும் அதனை திறக்க வேண்டும்.

பூங்காவில் மக்கள் பயன்பாடு இல்லாமல் கட்டிடம் ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. அந்தக் கட்டிடத்தின் மேற்கூரையில் செடி, கொடிகள் முளைத்து மோசமான நிலையில் உள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம்.

இந்த கட்டிடத்தை பழுது நீக்கி அங்கு உடற்பயிற்சி கூடம், யோகா பயிற்சி கூடம் தொடங்க வேண்டும். மேலும் அதற்கான உபகரணங்கள் வைக்க வேண்டும்.

விளையாட்டு உபகரணங்கள்

பூங்கா வளாக 4 மூலைகளிலும் மின்விளக்குகள் பொருத்த வேண்டும். பூங்காவில் நீரூற்று மோட்டார் பழுதடைந்து 5 வருடம் ஆகிறது. அதில் உள்ள மின்மோட்டார் என்ன ஆனது என்று தெரியவில்லை.

மீண்டும் நீரூற்றை விரைவில் காண வழி செய்ய வேண்டும். நீரூற்று விளக்குகள் எரிந்தும் பல வருடங்கள் ஆகிவிட்டன. பூங்காவில் பலவிதமான மூலிகை செடிகள், பூச்செடிகள் நகராட்சி சார்பில் நடப்பட வேண்டும். ப

ூங்காவில் விளையாட வரும் குழந்தைகளுக்கு அனைத்து விளையாட்டு உபகரணங்களும் பழுதடைந்து உள்ளன. இரும்பு கம்பிகள் துருப்பிடித்தும் ஓட்டைகள் விழுந்தும் பழுதாகி உள்ளது.

இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். மேலும் புதிய விளையாட்டு உபகரணங்களை அதிகமாக வைக்க வேண்டும். தற்போது குழந்தைகள் விளையாட ஒன்றுமே இல்லாத நிலையில் பூங்கா உள்ளது.

எனவே மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் நகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story