சபரி அய்யப்பன் கோவில் அருகே உள்ள பள்ளம் மூடப்படுமா?


சபரி அய்யப்பன் கோவில் அருகே உள்ள பள்ளம் மூடப்படுமா?
x

சபரி அய்யப்பன் கோவில் அருகே உள்ள பள்ளம் மூடப்படுமா?

தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் சபரி அய்யப்பன் கோவில் அருகே உள்ள பள்ளத்தை மூட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சபரி அய்யப்பன் கோவில்

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் சபரி அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. கேரளா சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரி அய்யப்பன் கோவிலுக்கு வருகின்றனர். கோவில் அருகே பெரிய பள்ளம் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் வாசலில் உள்ள பள்ளத்தை கவனிக்காமல் இருசக்கர வாகனத்தோடு பள்ளத்தில் விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. கோவில் அருகே குளத்தில் நீர்வழிந்து சென்றதால் சீரமைக்க பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். ஆனால் தற்போது வரை தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை.

போக்குவரத்து நெரிசல்

பள்ளத்தின் அருகே அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை, மன்னார்குடி, செல்லும் சாலையாக உள்ளதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே ரோடு மோசமான நிலையில் உள்ளதால் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் தோண்டப்பட்ட பள்ளமும் மூடாமல் இருப்பதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூடவும், விரைவில் வடிகால் வாய்க்கால் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story