நீதிமன்றத்திலேயே ஆவணங்கள் திருட்டு போவதா?மக்கள் நீதி மய்யம் கண்டனம்


நீதிமன்றத்திலேயே ஆவணங்கள் திருட்டு போவதா?மக்கள் நீதி மய்யம் கண்டனம்
x

முக்கியமான வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களே காணாமல்போவது ஏற்புடையதல்ல என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2021-ம் ஆண்டில் அப்போதைய முதல்-அமைச்சரின் பாதுகாப்புப் பணிக்கு சென்றிருந்தபோது, சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த, சிறப்பு டி.ஜி.பி., பெண் எஸ்.பி.யிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், 'வாட்ஸ்-அப்' பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதை அறிந்த நீதிபதி அதிர்ச்சியடைந்து, அவற்றைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முக்கியமான வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களே காணாமல்போவது ஏற்புடையதல்ல. இது, காவல், நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இனியும் இதுபோல நேரிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story