மரங்களை காக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?


மரங்களை காக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?
x

கருகி மொட்டையாக காட்சியளிக்கும் மலைகளில் மரங்களை காக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வேலூர்

தொடரும் தீ விபத்து

வேலூர் நகரை சுற்றி உள்ள மலைகளில் ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல் மே மாதங்களில் தீ விபத்து ஏற்பட்டு, மரங்கள், செடி கொடிகள் எரிந்து கருகுவது வாடிக்கை ஆகி வருகிறது. இதனால் பல மூலிகை செடிகளும், சிறு சிறு பறவைகள், விலங்குகள் தீயில் கருகி சாகின்றன. இது தானாக நிகழ்வது இல்லை. விஷமிகள் மலைகளுக்கு சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தீ வைத்து விடுவதால் தான் நிகழ்கிறது என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

கண்காணிப்பு குடில் அருகே

தொடரும் தீவிபத்தை தடுக்கவும், கண்காணிக்கவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கானத்தம் மலைப் பாதையில் கண்காணிப்பு குடில் அமைக்க பட்டது. தற்போது அந்த குடில் அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டு மலைகளில் மரங்கள் கருகி உள்ளன. இதனால் தீத் தடுப்பு கண்காணிப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது.

தீத் தடுப்பு கண்காணிப்பாளர்களை அதிக படுத்தி, தீவிரமாக கண்காணித்து, மலைகளில் தீ வைக்கும் நபர்கள் மீது வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வேலூர் மலைகளில் மீதம் இருக்கும் மரங்களையாவது காக்க முடியும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story