அரசு பள்ளி மேற்கூரை சரிசெய்யப்படுமா?


அரசு பள்ளி மேற்கூரை சரிசெய்யப்படுமா?
x

தோகைமலை அரசு பள்ளி மேற்கூரை சரிசெய்யப்படுமா? என மாணவ-மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

மேற்கூரை பெயர்ந்தது

கரூர் மாவட்டம், தோகைமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சுமார் 1,800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்டி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்பார்ப்பு

மேலும் அதிக எண்ணிக்கையில் பள்ளி இயங்கி வருவதால் அரசு மேல்நிலைப் பள்ளியை மாணவர்கள், மாணவிகள் என இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும், மாணவ-மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே அதற்குரிய கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி தரப்படுமா? என மாணவ-மாணவிகள் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story