புதிய குடிநீர் மேல்நிலைத்தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?


புதிய குடிநீர் மேல்நிலைத்தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?
x
தினத்தந்தி 17 April 2023 12:30 AM IST (Updated: 17 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இடையக்கோட்டை பகுதியில் புதிய மேல்நிலை குடிநீர்த்தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியின் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த குடிநீர் தொட்டி சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து மகாமாரியம்மன் கோவில் அருகே ரூ.35 லட்சம் செலவில் புதிய குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது. கடந்த மாதம் திறப்பு விழா நடந்தது. அதன்பின்பும் சேதமடைந்த குடிநீர் தொட்டி மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2 நாட்களுக்கு ஒரு முறை மேற்கு தெருவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கதிரவனிடம் கேட்டபோது, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர் முழுமையாக பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால் புதிய மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு தினந்தோறும் காலை நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.


Related Tags :
Next Story