புதிதாக கட்டப்பட்டுள்ள நல வாழ்வு மையம் திறக்கப்படுமா?


புதிதாக கட்டப்பட்டுள்ள நல வாழ்வு மையம் திறக்கப்படுமா?
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாங்கூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நலவாழ்வு மையம் திறக்கப்படுமா என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

நாங்கூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள நலவாழ்வு மையம் திறக்கப்படுமா என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நல வாழ்வு மையம்

திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் தமிழக சுகாதாரத் துறையின் கிராம நல வாழ்வு மையம் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இதில் சுகாதார செவிலியர் மற்றும் உதவியாளர் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக சுகாதார செவிலியர் அதே மையத்தில் தங்கி சிகிச்சை அளித்திட ஏதுவாக குடியிருப்பு வசதியும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மையத்தில் நாங்கூர், திருமேனி கூடம், குச்சிபாளையம், சித்தன் காத்திருப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு திடீரென ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உள்ளிட்ட சிறு சிறு வியாதிகளுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

புதிய கட்டிடம் திறக்கப்படுமா?

இந்த மைய கட்டிடம் முற்றிலும் சேதமடைந்ததால் கடந்த 2020 -ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனிடையே இங்கு இயங்கி வந்த சுகாதார மையம் வாடகை கட்டிடத்தில் தற்போது இயங்கி வருகிறது. சுமார் 6 மாதங்களாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள இந்த கட்டிடத்தை திறக்க வேண்டுமென நாங்கூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் சேதமடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நலவாழ்வு மையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை திறந்து பொதுமக்கள் தொடர்ந்து பயன் பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story