குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?


குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி தென்பாதியில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைகப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி தென்பாதியில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைகப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

சீர்காழி தென்பாதியில் திட்டை சாலை உள்ளது. இந்த சாலையை திட்டை, பசும்பொன் முத்துராமலிங்கம் தெரு, தஷ்ணாமூர்த்தி நகர், கற்பகம் நகர், ஐம்பொன் நகர், சின்னத்தம்பி நகர், ஆனந்தம் நகர், ஏ.என்.எஸ். நகர், முருகையா நகர், குளங்கரை, திட்டை, சன்சிட்டிநகர், தனலட்சுமி நகர், வைத்தியநாத நகர், மகாலட்சுமி நகர், தில்லைவிடங்கன், புளியந்துறை, கன்னிகோவில் தெரு, திருத்தோணிபுரம், செம்மங்குடி, சிவனார்விளாகம், நங்கநல்லத்தெரு, அண்ணா நகர், பொதிகை நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை வழியாக தினமும் அரசு பஸ் மற்றும் பள்ளி வாகனம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் இந்த சாலை சின்னத்தம்பி நகர் முதல் திட்டை ஊராட்சிகுட்பட்ட காமாட்சி நகர் வரை சேதமடைந்து காணப்படுகிறது. ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

வாகன ஓட்டிகள் அவதி

மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர். இதன் காரணமாக சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை சேதமடைந்துள்ளதால் அவசர காலங்களில் ஆட்டோ, வாடகை கார், ேவன் உள்ளிட்டவை வர மறுப்பதால் இப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இப்பகுதிக்கு வாகனங்கள் வர மறுப்பதால் நீண்ட தூரம் உள்ள தென்பாதி மெயின் ரோட்டிற்கு வந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி கூறுகையில், சீர்காழி தென்பாதி மெயின் சாலையில் இருந்து செல்லும் திட்டை சாலையில் சின்னத்தம்பி நகர் முதல் காமாட்சி நகர் வரை சேதடைந்த போக்குவரத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இது நபார்டு கிராம சாலை திட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் சாலையை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க முடியாது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story