புதிதாக போடப்பட்ட சாலையில் குழிகள் மூடப்படுமா?
புதிதாக போடப்பட்ட சாலையில் குழிகள் மூடப்படுமா?
தஞ்சை பாலாஜி நகரில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலையில் உள்ள குழிகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் குழிகள்
தஞ்சை மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையில் உள்ளது பாலாஜி நகர். இந்த பகுதியில் ஏராளமான வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவை உள்ளன.
மருத்துவக்கல்லூரி சாலையில் இருந்து பாலாஜி நகருக்கு செல்லும் சாலையில் தற்போது புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் பல்வேறு இடங்களில் குழிகள் மூடப்படாமல் உள்ளது. மேலும் அந்த குழிகளில் ஒரு சில இடங்களில் கட்டை, கம்பு களை வைத்து மூடி உள்ளனர். மேலும் எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
தற்போது மழை பெய்து வருவதால் மழை தண்ணீர் குழிகளுக்குகள் தேங்கி விடுகிறது. இதானல் தண்ணீர் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவபதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள குழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.