பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?
தகட்டூர் அருகே பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் வெள்ளிக்கிடங்கு சாலையில் இருந்து தகட்டூர் பெத்தாச்சிகாடு ரேஷன்கடை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு செல்லும் குறுகிய பாலம் உள்ளது. இந்த பாலம் சேதமடைந்து தடுப்புச்சுவர்களில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ரேஷன் கடை மற்றும் வேளாண் வங்கிக்கு இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் பாலத்தில் செல்லும் போது அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தின் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும். இ்ல்லையெனில் சேதமடைந்த பாலத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story