நடுவூர்க்கரை ஆரம்பசுகாதார நிலைய மேற்கூரை சீரமைக்கப்படுமா?


நடுவூர்க்கரை ஆரம்பசுகாதார நிலைய மேற்கூரை சீரமைக்கப்படுமா?
x

மணவாளக்குறிச்சி அருகே நடுவூர்க்கரை ஆரம்ப சுகாதார நிலையம் மேற்கூரை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே நடுவூர்க்கரை ஆரம்ப சுகாதார நிலையம் மேற்கூரை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலத்தில் நடுவூர்க்கரை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்துக்கு மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, அழகன்பாறை போன்ற பகுதியில் உள்ள பொதுமக்கள் வந்து நோய்க்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

ஆனால் சுகாதார நிலையத்தில் மேற்கூரையில் ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. மழை நேரங்களில் நோய்க்கு சிகிச்சை பெற வருபவர்கள் மழையில் நனைகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இங்கு டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். 5 கி.மீ. சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். இங்கு வரும் பொதுமக்கள் உட்காருவதற்கு போதிய இட வசதியும் இல்லை.

இவற்றால் சிகிச்சை பெற வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இதுதவிர தெரு நாய்களும் இங்கு வந்து தங்குகின்றன. எனவே நடுவூர்க்கரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மேற்கூரையை சீரமைத்து, சிகிச்சை பெற வருபவர்கள் உட்கார போதிய இட வசதியும் செய்து தர வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story