வேகத்தடை சீரமைக்கப்படுமா?


வேகத்தடை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 29 May 2023 12:31 AM IST (Updated: 29 May 2023 11:40 AM IST)
t-max-icont-min-icon

வேகத்தடை சீரமைக்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது வி. கைகாட்டி. இங்கு சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது .முத்துவாஞ்சேரி சாலையில் சென்டர் மீடியன் அமைந்துள்ளது. இதனையொட்டி மேற்கு புற சாலை வழியாக 24 மணி நேரமும் எண்ணற்ற கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் அடிக்கடி இங்கு விபத்துக்கள் நிகழும் சூழல் உள்ளது.இதை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டுக்கு முன்பு இங்கு வேகத்தடை அமைக்கப்பட்டது. மேற்படி வேகத்தடை வழியாக எண்ணற்ற கனரக வாகனங்கள் சென்று வருவதால் சிதிலமடைந்து சாலையும், வேகத்தடையும் ஒரே மாதிரி உள்ளது. அதில் எவ்வித வெள்ளை நிறபட்டைகளும் இல்லை. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story