உழவர் சந்தை வாசலில் சுவரை இடித்து நிற்கும் மரம் அகற்றப்படுமா?


உழவர் சந்தை வாசலில் சுவரை இடித்து நிற்கும் மரம் அகற்றப்படுமா?
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகை உழவர் சந்தை முன்பு சுவரை இடித்து நிற்கும் மரம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை உழவர் சந்தை முன்பு சுவரை இடித்து நிற்கும் மரம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

உழவர் சந்தை வாசலில்...

நாகை உழவர் சந்தையில், அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து காய்கறிகள், கீரைகள், இயற்கையான முறையில் பயிரிடப்பட்டவைகள் கிடைக்கிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

இருப்பினும் இட பற்றாக்குறையால் நெருக்கடியான சூழல் உள்ளது. இந்த நிலையில் உழவர் சந்தையின் வாசலில் இ்டையூறாக சுற்றுச்சுவரை இடித்து கொண்டு எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் பழமையான மரம் உள்ளது.

அச்சமின்றி வந்து செல்ல

இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

எனவே பொதுமக்கள் அச்சமின்றி வந்து செல்லவும், அசம்பாவிதத்தை தடுக்கும் பொருட்டு நகராட்சி மூலம் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு நிற்கும் பழமையான மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story