கூத்தாநல்லூரில் வேகத்தடை அமைக்கப்படுமா ?


கூத்தாநல்லூரில் வேகத்தடை அமைக்கப்படுமா ?
x

கூத்தாநல்லூரில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா ? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூரில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா ? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

3 பிரிவு சாலை

கூத்தாநல்லூரில் உள்ள பாய்க்காரத்தெரு பாலத்தையொட்டி 3 பிரிவு சாலைகள் உள்ளன. இந்த 3 பிரிவு சாலையானது லெட்சுமாங்குடி, வடபாதிமங்கலம், பாய்க்காரத்தெரு செல்வதற்கான வழித்தடமாக உள்ளது.

இந்த சாலையில் மன்னார்குடி, திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு சென்று வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள், கார், வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

அடிக்கடி விபத்து

இந்த நிலையில், பாய்க்காரத்தெரு பாலம் எதிரே செல்லக்கூடிய வாகனங்கள் எந்த பிரிவு சாலையில் செல்கிறது என்பது எளிதில் தெரிவதில்லை. இதனால், வேகமாக வரக்கூடிய வாகனங்கள் திடீரென ஏதாவது ஒரு பிரிவு சாலையில் திரும்பும் போது, எதிர் எதிரே வரக்கூடிய வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து ஏற்படுகிறது.

மேலும், இந்த 3 பிரிவு சாலையையொட்டி மேலக்கடைத்தெரு, பெரியக்கடைத்தெரு கடைவீதிகள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகவும் உள்ளது. மேலும், பாய்க்காரத்தெரு பாலம் அருகில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடிகள் உள்ளதால் பள்ளி மாணவர்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

வேகத்தடை

இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இந்த சாலை உள்ளது. இதனால், இந்த 3 பிரிவு சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும் அதிகளவில் வாகனங்கள் வேகமாக சென்று வருவதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

எனவே விபத்துகளை தவிர்க்கும் வகையில் பாய்க்காரத்தெரு பாலம் எதிரே 3 பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று அப்பகுதி பொதுமக்கள், மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story