வேலூர் பாலம் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?


வேலூர் பாலம் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?
x

திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் வேலூர் பாலம் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் வேலூர் பாலம் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆபத்தான வளைவு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வேலூர் பாலம் அருகே ஆபத்தான வளைவு உள்ளது. இந்த இடத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். திருத்துறைப்பூண்டியில் இருந்து வேலூர், ஆலத்தம்பாடி, மணலி, கச்சனம், நாள்ரோடு, மாவூர், வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருவாரூர் நோக்கி செல்கின்றன.

மேலும் திருத்துறைப்பூண்டியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்களும், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், வழியாக சென்னை செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்கின்றன.

அடிக்கடி விபத்து

இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். போக்குவரத்துக்கு முக்கியதுவம் வாய்ந்த இந்த சாலையில் வேலூர் பாலம் அருகில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே விபத்தை தடுக்கும் வகையில் அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் சோலார் விளக்கு பொருத்தி அறிவிப்பு பலகையும் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

வேகத்தடை

இதுகுறித்து சமூகஆர்வலர் சுவாமிநாதன் கூறுகையில், திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். வாகனங்கள் எப்போதும் சென்றுகொண் டே இருக்கும். இதனால் இந்த சாலையில் வேலூர் பாலம் அருகே உள்ள விபத்துகளை ஏற்படுத்தும் அந்த ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் வரம்பியம், விட்டுக்கட்டி, பள்ளங்கோயில், பகுதியில் இருந்து திருத்துறைப்பூண்டி நகருக்கு வரும் வாகனங்கள் அந்த இடத்தில் ஏறுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அந்த வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

சோலார் விளக்கு

வக்கீல் பாஸ்கர் கூறுகையில், வேலூர், மணலி, குரும்பல், குன்னூர், தேளச்சேரி, ஆலிவலம், ஆண்டாங்கரை, கீரலத்துர், பொன்னீரை, அம்மனூர், கச்சணம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகருக்கு வேலூர் பாலம் வழியாகத்தான் வருவார்கள்.

ஆகையால் இந்த திருப்பத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அந்த இடத்தில் உடனடியாக வேகத்தடை அமைத்து, அறிவிப்பு பலகை பொருத்தி சோலார் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.


Next Story