ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?
வடபாதிமங்கலம் பஸ் நிலையம் அருகே ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
வடபாதிமங்கலம் பஸ் நிலையம் அருகே ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆபத்தான வளைவு
கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலம் பஸ் நிலையம் அருகே, உச்சுவாடி இரட்டை தெருவிற்கு செல்ல வெண்ணாற்றின் குறுக்கே நடைபாலம் உள்ளது. இந்த நடைபாலத்தில் சென்று வருபவர்கள் சாலையை கடந்து தான் செல்ல வேண்டும்.
இந்த சாலையில் மேலே குறிப்பிட்ட இடத்தில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவில் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
வேகத்தடை அமைக்க வேண்டும்
இந்த சாலைவழியாக அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்டவைகளுக்கு செல்ல வேண்டும். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்து வருகின்றனர்.எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.