ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?


ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?
x

விபத்துகளை தவிர்க்க நெடும்பலம் ரெயில்வே கேட் அருகில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

விபத்துகளை தவிர்க்க நெடும்பலம் ரெயில்வே கேட் அருகில் ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆபத்தான வளைவு

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வரும் சாலையில் ெரயில்வே கேட் அருகில் ஒரு வளைவு உள்ளது. இந்த வளைவு மிகவும் ஆபத்தாக உள்ளது. இங்கு வேகத்தடை இல்லை.

திருத்துறைப்பூண்டியில் இருந்து நெடும்பலம், கள்ளிக்குடி, வேப்பஞ்சேரி, கருவப்பஞ்சேரி, பாண்டிசத்திரம், செம்பியமங்கலம், பாண்டி, குன்னலூர், தொண்டைக்காடு, இடும்பாவனம், இடையூர் உதயமார்த்தாண்டபுரம் சங்கேந்தி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை மற்றும் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாக தான் செல்கின்றன.

விபத்துகள்

இந்த சாலையில் உள்ள வளைவில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

எனவே விபத்துகளை தவிர்க்க நெடும்பலம் ரெயில்வே கேட் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேகத்தடை

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ரவிசங்கர் கூறுகையில்,

நெடும்பலம் ெரயில்வே கேட் மிகவும் ஆபத்தான பகுதியாக உள்ளது. வாகனங்கள் வேகமாக வந்து திரும்புவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகளில் சிக்குகிறார்கள்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துகளை தவிர்க்க ரெயில்வே கேட் அருகே ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைத்து சோலார் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்றார்.


Next Story