பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?


பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?
x

கூத்தாநல்லூர் 3 பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் 3 பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பிரிவு சாலைகள்

கூத்தாநல்லூர் பாய்க்காரத்தெரு பாலத்தை மையமாக கொண்டு, லட்சுமாங்குடி சாலை, வடபாதிமங்கலம் சாலை, மரக்கடை சாலை என 3 பிரிவு சாலைகள் அமைக்கப்பட்டது. இதில், லட்சுமாங்குடி மற்றும் வடபாதிமங்கலம் சாலைகளில், கும்பகோணம், குடவாசல், கொரடாச்சேரி, திருவாரூர், மன்னார்குடி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்குச் சென்று வரக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன.

வேகத்தடை

இதைப்போல மரக்கடை சாலையிலும் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், பாய்க்காரத்தெரு பாலத்தை மையமாக கொண்ட 3 பிரிவு சாலைகளிலும் எதிர் எதிரே வரக்கூடிய வாகனங்கள், எந்த பிரிவு சாலைகளில் திரும்புகிறது என்று எளிதில் தெரிவதில்லை. மேலும், 3 பிரிவு சாலைகளிலும் சென்று வரக்கூடிய வாகனங்கள் வேகமாகவும் செல்கிறது. இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் இடமாக இந்த 3 பிரிவு சாலை உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க 3 பிரிவு சாலை முகப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story