வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் நிலையம் திறப்பு விழா நடந்தது. கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிலையத்தை திறந்து வைத்து, குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். அவருக்கு டாக்டர் சரவணகுமார் மற்றும் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் ஆரம்பசுகாதார நிலைய ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story