480 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருத்துறைப்பூண்டி அருகே சாராய வியாபாரி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே சாராய வியாபாரி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சாராய வியாபாரி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடியை சேர்ந்தவர் அன்பு. சாராய வியாபாரியான இவர் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் சிறையிலிருந்து வெளியில் வந்தார். இந்தநிலையில் அவர் வீட்டில் வெளிமாநில மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
480 மது பாட்டில்கள்
இதன்பேரில் போலீசார் விளக்குடிக்கு சென்று அன்பு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story