மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர் ைகது


மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர் ைகது
x

திருக்காட்டுப்பள்ளி அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர் ைகது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மேலப்புதகிரி பகுதியில் உரிய மதுபானங்கள் விற்கப்படுவதாக திருக்காட்டுப்பள்ளி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சிறு ஓட்டல் பின்பகுதியில் 12 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த மேலபுதகிரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சேகர் என்ற விஜயபாஸ்கர் (வயது 46) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 12மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story