நாடியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா
நாடியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
வடகாடு:
வடகாடு அருகே கீழாத்தூரில் நாடியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. கோவிலில் நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் நெல் மணிகளை போட்டு அதில் தென்னம்பாளைகளை வைத்து, அதனை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக நாடியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் மூன்று முறை கோவிலை சுற்றி வந்து தென்னம்பாளைகள் மற்றும் நெல் மணிகளை கோவிலில் கொட்டி அம்மனை வழிபட்டு சென்றனர். இதில் கீழாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story