ஸ்கூட்டரில் சென்று மது விற்றவர் கைது
அய்யம்பேட்டை அருகே ஸ்கூட்டரில் சென்று மது விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அய்யம்பேட்டை;
அய்யம்பேட்டை அருகே ஸ்கூட்டரில் சென்று மது விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 150 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
அய்யம்பேட்டை போலீசார் நேற்று காலை மாத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு ஸ்கூட்டரை போலீசார் நிறுத்தியபோது அதை ஒட்டி வந்தவர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். இதனால் போலீசார் ஸ்கூட்டரை விரட்டி சென்று பிடித்து சோதனை செய்தனர்.
கைது
சோதனையில் ஸ்கூட்டாில் ஏராளமான மது பாட்டில்கள் இருந்தது. ஸ்கூட்டர் ஒட்டி வந்தவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குருவாடியை சேர்ந்த சுரேஷ் (வயது 40) என்பதும் அவர் மதுபாட்டில்களை ஸ்கூட்டரில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. சுரேஷை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 150 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.