வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல் கலெக்டர் உத்தரவு

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு  கொல்லிமலையில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்  கலெக்டர் உத்தரவு
x

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு கொல்லிமலையில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல் கலெக்டர் உத்தரவு

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு செம்மேடு, சோளக்காடு, செங்கரை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை), 2 மற்றும் 3-ந் தேதி என 3 நாட்கள் மூடப்படுகிறது. இதை மீறி யாரேனும் மறைமுகமாக மது விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story