தேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவ, மாணவிகள் 27 பேருக்கு பாராட்டு
தேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவ, மாணவிகள் 27 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி
கன்னியாகுமரி மாவட்டம் திருத்துவபுரத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். அவர்களில் 27 பேர் வெற்றி பெற்று பதக்கங்கள், கோப்பை, சான்றிதழ்களை பெற்று உள்ளனர். அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்கள் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
Related Tags :
Next Story