மாநில யோகா போட்டியில் வெற்றி பெற்ற போலீஸ்காரருக்கு பாராட்டு
மாநில யோகா போட்டியில் வெற்றி பெற்ற போலீஸ்காரருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டுதெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்டெர்நேஷனல் யூனியன் யோகா கூட்டமைப்பு மற்றும் சைன் யோகா பவர் அமைப்பு சார்பில் பள்ளி, கல்லூரி மற்றும் பொதுப்பிரிவினருக்கு மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் பொதுப்பிரிவினருக்கான யோகா போட்டியில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கட்டுபாட்டு அறையில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் ராஜலிங்கம் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். அவரை, தொடர்ந்து பல வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.
Related Tags :
Next Story