அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வயர்மேன் உதவியாளர் தகுதிகாண் தேர்வு


அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வயர்மேன் உதவியாளர் தகுதிகாண் தேர்வு
x

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறும் வயர்மேன் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 26-ந் தேதி கடைசி நாள் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறும் வயர்மேன் உதவியாளர் தகுதிகாண் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 26-ந் தேதி கடைசி நாள் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தகுதிகாண் தேர்வு

வயர்மேன் உதவியாளர் தகுதிகாண் தேர்வு செப்டம்பர் மாதம் 24,25-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக தகுதி வாய்ந்த வயர்மேன் உதவியாளர்களிடம் இருந்தும், இந்த துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்தும், தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் வயர்மேன் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இந்த தேர்வுக்கு உரிய விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்க குறிப்பேட்டினை https.//skilltraning.tn.gov.in/DET என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

26-ந் தேதி கடைசி நாள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு மையங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 35 அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்து அந்த தேர்வு மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். போதுமான விண்ணப்பங்கள் பெறப்படாத நிலையில் தேர்வு மையங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டு அங்கு தேர்வுகள் நடைபெறும். தேர்வு மையம் இறுதி செய்வது தொடர்பாக துறைத்தலைவரின் முடிவே இறுதியானது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு கிடைக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 26-ந் தேதியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story