மாயமான பெண் காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்


மாயமான பெண் காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே மாயமான பெண் காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே திப்பிரமலை காலான்விளை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி ஓமனா (வயது 45). இவருடைய தங்கை சகுந்தலா மகள் சிந்து (21). இவர் ஓமனா வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கி இருந்தார். சிந்துக்கும், அருமனை அருகே பிலாங்காலவிளை பகுதியை சேர்ந்த நிஸ்லின் ராஜ் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சிந்து மாயமானார். இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிந்துவை தேடி வந்தனர். இந்த நிலையில் மாயமான சிந்து தனது காதலன் நிஸ்லின்ராஜூடன் கருங்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை விசாரணை நடத்தினார்.


Next Story