துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு வழியாக மத்திய பிரதேசத்துக்கு ரெயிலில் சென்ற ரூ.700 கோடி


துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு வழியாக மத்திய பிரதேசத்துக்கு ரெயிலில் சென்ற ரூ.700 கோடி
x
தினத்தந்தி 18 Jun 2023 3:24 AM IST (Updated: 18 Jun 2023 7:18 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு வழியாக மத்திய பிரதேசத்துக்கு ரெயிலில் ரூ.700 கோடி சென்றது.

ஈரோடு

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் வரை செல்லும் கொச்சுவேலி-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடைசி கூட்ஸ் கேரியர் பெட்டியில் ரிசர்வ் வங்கியின் ரூ.700 கோடி பூட்டி சீலிடப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் இந்த பெட்டி கொண்டு செல்லப்பட்டது. மேலும் கொச்சுவேலி-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணம் கொண்டு செல்லப்பட்ட இந்த பெட்டிக்கு ஈரோடு ரெயில் நிலையம் உள்பட ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ரெயில்வே போலீசாரும் பாதுகாப்பு அளித்தனர்.

இதேபோல், இந்தூர் செல்லும் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு அளிக்க ஏற்கனவே ரெயில்வே நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பணம் எதற்காக ரெயிலில் கொண்டு செல்லப்படுகிறது என்ற விவரம் தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story