மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடம்-சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார்


மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  நவீன தொழில்நுட்பத்துடன்  ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடம்-சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார்
x

மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடத்தை சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார்

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடத்தை சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.

திட்டப்பணிகள்

நாங்குநேரி யூனியன் மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா, பரப்பாடியில் ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா, ரூ.27.20 லட்சம் மதிப்பில் 500 வீடுகளுக்கு தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குதல், ரூ.32.84 லட்சம் மதிப்பில் பாண்டிச்சேரி கிராமம் முதல் கோவன்குளம் கிராமம் வரைக்கும் செல்லும் சாலையில் சிறு பாலம் அமைத்தல், பரப்பாடி குளம் ஆழப்படுத்தி மதகு சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் மற்றும் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா எட்வின் வரவேற்றார்.

மாணவர்களுக்கு பாடம் நடத்திய சபாநாயகர்

விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மூலைக்கரைப்பட்டியில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறை புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அங்கு மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஸ்கிரீனில் பூமி உருண்டை படம் வரைந்து பூமத்திய ரேகை, மகர ரேகை பற்றி பாடம் நடத்தினார். அதனை மாவட்ட கலெக்டர் உள்பட அனைவரும், மாணவர்கள் அமரும் பெஞ்சில் அமர்ந்து ஆர்வமுடன் பார்த்தனர். பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

முந்தைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் அமைப்பு இல்லாத காலத்தில் கலைஞர்தான் டைடல் பார்க், சிறுசேரியில் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார். முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய துணைவேந்தராக இருந்த அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்து இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடியாக தமிழில் மென்பொருள் தயார் செய்து நாமெல்லாம் தமிழில் டைப் செய்து அனுப்பக்கூடிய இந்த வாய்ப்பை உருவாக்கி தந்தவர் கலைஞர் ஆவார். அறிவியல் மக்களுக்கு பயன்படவேண்டும் என்பதற்காகதான் மக்களிடம் மூடநம்பிக்கைகளை போக்கி, தமிழ்நாட்டில் மனித நேயத்தோடு ஒரு ஆட்சி நடைபெற்று வருகிறதென்றால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன், மூலைக்கரைப்பட்டி நகர பஞ்சாயத்து தலைவர் பார்வதி மோகன், தாசில்தார் இசக்கிபாண்டி, உதவி திட்ட அலுவலர் சுமதி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிஷோர்குமார், மங்களம்கோமதி, நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் இரா.நடராஜன், மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் ஞானராஜ், ஒன்றிய கவுன்சிலர் அகஸ்டின் கீதராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் மோகனா யோசுவா (இறைப்புவாரி), எஸ்.ஆர்.முருகன் (பாப்பான்குளம்), வளர்மதி சேர்மத்துரை (ராமகிருஷ்ணாபுரம்), பரப்பாடி கூட்டுறவு சங்க தலைவர் முருகானந்தம், நாங்குநேரி யூனியன் மேலாளர் செல்வன், மூலைக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கதீஜா மெகர்பானு மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story