சார்பதிவக எல்லை மறுசீரமைப்பு குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்


சார்பதிவக எல்லை மறுசீரமைப்பு குறித்து  கருத்துக்கேட்பு கூட்டம்
x

தேனியில் பதிவுத்துறை சார்பில், சார்பதிவக கிராம எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது

தேனி

தேனியில் பதிவுத்துறை சார்பில், சார்பதிவக கிராம எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, சார்பதிவக கிராம எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். இக்கூட்டத்தில் மதுரை மண்டல பதிவுத்துறை துணைத்தலைவர் ஜெகதீசன், மாவட்ட பதிவாளர் பாவேந்தன் மற்றும் பதிவுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story