ஆரல்வாய்மொழியில் வாலிபருடன் வசித்த இளம்பெண் தற்கொலை


ஆரல்வாய்மொழியில் வாலிபருடன்   வசித்த இளம்பெண் தற்கொலை
x

கணவர், மகனை உதறி விட்டு ஆரல்வாய்மொழியில் வாலிபருடன் வசித்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

கணவர், மகனை உதறி விட்டு ஆரல்வாய்மொழியில் வாலிபருடன் வசித்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

இளம்பெண்

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் ஜாண்பாண்டி. இவருடைய மனைவி பொட்டுகனி. இவர்களுடைய மகள் சவுமியா (வயது 21). இவருக்கும், ராதாபுரத்தை சேர்ந்த சுமன் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக சவுமியா ஆரல்வாய்மொழியில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.

வாலிபருடன் வசித்தார்

அப்போது, அங்கு வேலை செய்த ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகரை சேர்ந்த பிரகாஷ் (23) என்பவருடன் சவுமியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து சவுமியா தனது கணவர், குழந்தையை உதறிவிட்டு பிரகாசுடன் ஆரல்வாய்மொழி கணேசபுரம் மலைகிணறு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக பிரகாஷ் செண்டை மேளம் அடிக்க சென்றார். சவுமியாவும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சவுமியாவின் தாயார் பொட்டுகனி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சவுமியாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.

வாலிபருடன் வசித்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story