டாக்டரின் பரிந்துரை இன்றி வலிநிவாரண மருந்துகள் வழங்க கூடாது


டாக்டரின் பரிந்துரை இன்றி   வலிநிவாரண மருந்துகள் வழங்க கூடாது
x

தூத்துக்குடி மாவட்டத்தில் டாக்டரின் பரிந்துரை இன்றி வலி நிவாரண மருந்துகள் வழங்க கூடாது என்று மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் டாக்டரின் பரிந்துரை இன்றி வலி நிவாரண மருந்துகள் வழங்க கூடாது என்று மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் பாதுகாப்பாக மருந்து விற்பனை செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜான்பிரிட்டோ, பொருளாளர் வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வணிக பிரிவு தலைவர் முத்துகிருஷ்ணன், கோவில்பட்டி கார்த்திக் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை இணை இயக்குனர் இளங்கோ, தூத்துக்குடி மாவட்ட முதுநிலை மருந்து ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

வலி நிவாரணம்

கூட்டத்தில் மருந்து வணிகம் என்பது மற்ற வணிகத்தை போல் அல்லாமல் சமுதாய அக்கறையுடன் செயல்படக்கூடிய ஒன்று ஆகும். அதனை அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரண மருந்துகள் வழங்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் வரும் காலங்களில் மத்திய அரசின் சட்ட திட்டங்கள் அதிகமாகும் என்ற சூழ்நிலை உள்ளதால் வணிகர்கள் புதிய நடைமுறைக்கு ஏற்ப கம்ப்யூட்டர், கண்காணிப்பு கேமிரா பொருத்தி தங்கள் பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர்.

கூட்டத்தில் மொத்த வணிக பிரிவு தலைவர் அப்பன்ராஜ் மற்றும் மருந்த வணிகர்கள் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மருந்து மொத்த வணிக பிரிவு தலைவர் ராஜேஷ் கண்ணா நன்றி கூறினார்.


Next Story