அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல்


அனுமதியின்றி  மண் அள்ளிய டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
x

தேவதானப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டர்,பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி

தேவதானப்பட்டி பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது எருமலை நாயக்கன்பட்டி வேட்டுவன் குளம் கண்மாயின் கரையை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து 2 பேர் டிராக்டரில் மண் அள்ளி கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். விசாரணையில் அவர்கள் அதே ஊரை சேர்ந்த கண்ணன் (வயது 25), முத்துக்குமார் (29) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story