லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது
எருமப்பட்டியில் லாட்டரி சீட்டு விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
எருமப்பட்டி
எருமப்பட்டி அரையா அருகே உள்ள அலங்காநத்தம் பிரிவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் சென்ற போலீசார் அலங்காநத்தம் பிரிவில் டீக்கடை நடத்தி வரும் ஜெயராஜ் மனைவி செல்வி (வயது 39) தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 5 லட்டரி சீட்டுகளை பறிமுதல்செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire